Skip to main content

Posts

Welcome Andhra Pradesh

  ஆந்திரப் பிரதேசம்  ( Andhra Pradesh ) என்பது  இந்தியாவின் ,  28 மாநிலங்களுள்  ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம்  விசாகப்பட்டினம்  ஆகும். இந்தியாவின்  செம்மொழிகளில்  ஒன்றான  தெலுங்கு  இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது. 2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு  தெலுங்கானா  என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த  ஐதராபாத்  நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள்வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக  அமராவதி  என்ற நகரம் உருவாக்கப்பட்டபிறகு அது சட்...
Recent posts

Welcome Kerala

  கேரளம்  அல்லது  கேரளா  ( Kerala , ஆங்கிலமாக்கப்பட்டது)  உள்ளூர் மொழி;  மலையாளம் : കേരളം, —  Kēraḷaṁ )  இந்தியாவின்  தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில்  தமிழ் நாட்டையும் , வடக்கில்  கர்நாடகத்தையும்  எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில்  அரபுக் கடல்  உள்ளது.  மலையாளம்  கேரளாவின் முதன்மையான  மொழியாகும் .  தமிழ்  பேசுவோரும் அதிகமாக காணப்படுகின்றனர். கேரளத்தின் தலைநகரம்  திருவனந்தபுரம் . பிற குறிப்பிடத்தக்க நகரங்கள்  கொச்சி , கோழிக்கோடு   திருச்சூர்  மற்றும்  கோட்டயம்  ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

Welcome Tamil Nadu

  தமிழ்நாடு  ( Tamil Nadu ) என்பது  இந்தியாவின் ,  28   மாநிலங்களில்  ஒன்றாகும். இது  தமிழகம்  என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன்  தலைநகரமாக   சென்னை  உள்ளது. தமிழ்நாடு  இந்தியத் துணைக்கண்டத்தின்  தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கிலும் வடக்கிலும்  கேரளா ,  கருநாடகம்  மற்றும்  ஆந்திர  மாநிலங்கள் உள்ளன.  புதுச்சேரி   ஒன்றியப் பகுதியின் ,  புதுச்சேரி  மற்றும்  காரைக்கால்  பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு  மாநிலம்  எல்லைகளைக் கொண்டுள்ளது.  இலங்கை  நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது.  புவியியல்  எல்லைகளாக வடக்கே  கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் , மேற்கே  மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின்   நீலமலை  வீச்செல்லை,  ஆனை மலை  வீச்செல்லை,  பாலக்காடு  கணவாய் ஆகியவையும் கிழக்கில்  வங்காள விரிகுடாக்  கடலும், தென்கிழக்கில்  மன்னார் வளைகுடா ,  பாக்கு நீரிணை  ஆ...